12 ம் வகுப்பு தேர்வு ரத்து - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு! நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வலியிறுத்தல் !!



சென்னை : கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. மேலும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

மேலும் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தடைபட்டு பெரும்பாலான நாட்கள் ஆன்லைன் வகுப்புகளே நடந்து வந்த நிலையில், கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட எவரும் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க அமைக்கப்பட்டுள்ள குழு கடந்த வருட கல்வி சூழல், கிராமப்புர மாணவர்களுக்கு முழுமையான ஆன்லைன் கல்வி கிடைப்பதில் இருந்த சிக்கல், உயர்கல்வி சேர்க்கைக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் முக்கியத்துவம் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்கிட வேண்டும்.

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு நடைமுறையில் உள்ள நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்பதோடு, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் தமிழகத்தில் ரத்து செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் கடந்த வருடங்களில் 10,11,12-ம் வகுப்புகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர வேண்டிய நிலை உள்ளது. எனினும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு குறித்து இது வரை அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை. உயர்கல்வி சேர்க்கைகள் அடுத்தடுத்த மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கான தேர்வு குறித்தும் விரைவாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமென்றும் பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :