நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 200 வீதித்தடைகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
அத்துடன் நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ள 24 மணித்தியாலத்தில் குறிதத நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 30 ஆம்திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டகுற்றச்சாட்டில் 42 ஆயிரத்து 789 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் 14 இடங்களில் 6 ஆயிரத்து 694 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment