காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையின்போது அதிகப்படியான 14பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் இது பற்றிக்கூறுகையில்:
எமது காரியாலயத்தில் அண்மையில் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கு முகமாக மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் மாவடிப்பள்ளி வியாபாரி ஒருவருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டிருந்தது.
அவரது குடும்பத்தை மையமாகவைத்து நேற்று 102பேருக்கு அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. இதில் அவரது குடும்பத்தினர் அடங்கலாக 4குடும்பங்களில் 14பேர் தொற்று இருப்பதாக அடையாளக்காணப்பட்டுள்ளது.
அவர்களில் ஆண்களை பாலமுனை வைத்தியசாலைக்கும் பெண்களை மருதமுனை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைத்துள்ளோம்.
இதேவேளை காரைதீவு எட்டாம் பிரிவைச்சேர்ந்த ஒருவர் வெளியூரில் வைத்து தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளார். அவரது பிரிவில் இன்று சோதனை செய்யவுள்ளோம்.
இதனைத்தொடர்ந்து மேலும் காரைதீவுப்பிரதேசம் பூராக இச்சோதனைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளோம். என்றார்.
குறித்த தொற்று இனங்காணப்பட்ட வியாபாரியின் குடும்பத்தில் அவரது மனைவி 3பெண்பிள்ளைகள் 2ஆண்பிள்ளைகள் உள்ளிட்ட ஏழு(7) பேர் இனங்காணப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இந்தத்தொகையுடன் காரைதீவு பிரிவில் மொத்தமாக 127பேர் இனங்காணப்பட்டு 122பேர் குணமாகிவீடு வந்துசேர்ந்த அதேவேளை இன்னும் 25பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மொத்தமாக 26 வியாபாரிக்கான அண்டிஜென் பரிசோதனையின் போது மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment