நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.
அத்துடன், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் பயணத் தடையை நீடிக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பயணத்தடை தளர்த்தியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். கண்டிப்பான முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக கடந்த 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன், அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, குறித்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment