15நாள் முடக்கத்தால் வளத்தாப்பிட்டி மக்கள் பசி பட்டினியால் வாடும்நிலை:



கடைகளை திறந்து பொருட்களை கொள்வனவுசெய்ய இடமளிக்கவேண்டும்!
அம்பாறைமாவட்ட ஸ்ரீல.ச.கட்சி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் வேண்டுகோள்.
வி.ரி.சகாதேவராஜா-

டந்த 24 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை மற்றும் முடக்கம் என்பவற்றால் எமது மக்கள் பசி பட்டினியால் வாடும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள். எனவே பொருட்களை தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென புதிய வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் சம்மாந்துறைபிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளருமான வெள்ளி ஜெயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:
சடுதியாக எமது கிராமத்துள் 63பேருக்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் மரணித்த காரணத்தினால் கடந்த 3நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. வீதிக்குவீதி இராணுவமும் பொலிசாரும் பரப்பப்பட்டுள்ளனர். மகக்ள் வெளியே உள்ளே செல்லாதவாறு தடையிடப்பட்டுள்ளது.

இன்னும் 10நாட்களுக்கு இந்த முடக்கம் நீடிக்கப்படும். எனவே ஏலவே முடங்கியிருந்த மக்களுக்கு இந்த முடக்கம் மேலும் சுமையைக் கnhடுத்திருக்கின்றது.
அரசாங்கத்தின் நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை. அதுகிடைக்கும் எனற் நம்பிக்கைஉள்ளது. பிரதேசசெயலாளர் பல நடவடிக்கைகளi முன்னெடுத்துவருவதை அறிவோம்.

இங்குள்ள அரச தொழிலாளர்கள் அடிமட்டத்திலுள்ளவர்கள். எனவே அவர்களை ஏனைய அரசதொழிலாளர் போல் கொழுத்த சம்பளம் பெறுபவர்கள் என நினைத்து நிவாரணத்தi நிறுத்திவிடவேண்டாமென தயாவாகக்கேட்கிறோம். அவர்கள் கடன்பட்டு மாதம் 10ஆயிரம் ருபாவைக்கூட பெறாதவர்களாகவுள்ளனர்.
சுகாதாரநெறிமுறைப்படி இரு கடைகளையாவது திறந்து பொருட்களை தாராளமாக வழங்க குறிப்பாக அரசின் நிவாரணத்தில் உள்ளடக்கப்படாத பெண்களின் துவாய்கள் தேங்காண்எண்ணெய் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க்கபடவேண்டும்.

மேலும் தனவந்தர்கள் உதவிசெய்பவர்களுக்கு அனுமதி அளித்து எமது மக்களின் பசிபட்டினையை போக்க உரிய அரச அதிகாரிகள் உதவவேண்டும் எனக்கேட்கிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :