மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகள் விடுவிப்பு



ட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இரால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.
இங்கு கருத்துவெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ்,
மட்டக்களப்பு வாவியில் மீன்வளத்தை அதிகரிக்கவும் மீனவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் குறித்த பணி முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் பலனை இன்னும் சில மாதங்களில் மீனவர்கள் அடைந்துகொள்வர் என்றும் தெரிவித்தார். அத்தோடு எதிர்காலத்தில் மேலும் இரால் குஞ்சுகளும் மீன் குஞ்சுகளும் விடுவதற்கான நடவடிக்கைகள் மு;ன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சரின் பிரதிநிகளாக, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.சிவானந்தராஜா மற்றும் சு.சியாந் ஆகியோருடன் மாவட்ட கடற்தொழில் திணைக்கள ஊழியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :