தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கே இறைச்சிக்காக மாடு இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் டயகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய டயகம எல்லைக்குள்ளேயே மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.
பசு மாடு மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சந்திரகாமம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கடத்தலுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, டயகம பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், 325 லீற்றர் கோடாவும், கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment