மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (07.06.2021) 186 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று கொரோனா மரணங்களும் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் வீதியில் அனாவசியமாக பயணம் செய்தோர், வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர், நடமாடும் வியாபாரம் செய்தோர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 பேரும் களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும்வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 27 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செங்கலடி 01 நபரும் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிரான் 03 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் பொலிஸார் 03 பெரும் சிறைச்சாலையில் 07 பேருமாக மொத்தம் 186 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்
இதே வேளை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காங்கயன்ஓடை கிராமத்தில் ஒருவருமமாக மாவட்டத்தில் மூன்று பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment