அக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம்.



நூருல் ஹுதா உமர்-
க்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், பொலிஸ் உயரதிகாரி மற்றும் பாதுகாப்பு படையின் 49 வது படைப்பிரிவின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதி வர்த்தக சங்க பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு நாடு தழுவிய ரீதியில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணமும் வெகுவாக பாதித்து வருகிறது. அதன் விளைவாக அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கோவிட் 19 அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :