ஏறாவூர்- 2 கிராம சேவை அதிகாரி பகுதி தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது



ஏறாவூர் நிருபர் நாஸர்- 
 மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ஏறாவூரில் அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது பிரதேசம் இன்று 06.06.2021 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.பிரதானவீதி தொடக்கம் காட்டுப் பள்ளிவாயல் வீதி, அஸ்ஹர் பாடசாலை வீதி மற்றும் ஓடாவியார் வீதி ஆகிய பாதைகளுக்கிடைப்பட்ட ஏறாவூர்- 2 என்ற கிராம சேவை அதிகாரி பகுதி தற்போது தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திற்கான உள்ளக பாதைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இராணுவம் மற்றும் பொலிஸாரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இப்பிரதேசத்தில் 605 குடும்பங்களைச்சேர்ந்த 2420 பேர் வாழ்கின்றனர். குறிப்பாக ஏறாவூரில் இதுவரை சுமார் 250 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா மூன்றாம் அலையில் மாத்திரம் சுமார் 140 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூரில் 2 என்ற கிராம சேவையாளர் பிரதேசத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து முதலாவதாக பகுதியாக அப்பிரதேசத்தை முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வாதார நலன்களைக் கருத்திற்கொண்டு பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலத்தில் குறித்த பகுதி மக்கள் பீசீஆர் பரிசோதனைக்குட் படுத்தப்படவுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருள் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :