21ஆம் திகதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளத்தப்படுமா?



J.f.காமிலா பேகம்-
திர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

அதைவிடுத்து, உலகில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம், யாராலும் முன்பே எதையும் கூற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :