காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து மாவடிப்பள்ளி பிரதேசத்தில் மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையில் 04 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்கள் அரச அதிகாரி ஒருவரும் அவரின் குடும்பத்தினர்கள் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment