24 கிராம சேவகப் பிரிவுகள் முடங்கின! 82 பிரிவுகள் திறப்பு



J.f.காமிலா பேகம்-
நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாவற்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர் 2 மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் Nawa Walathapitiya கிராமம், புத்தளம் மாவட்டத்தின் Marakkalagama, நுவரெலியா மாவட்டத்தின் கரோலினா தோட்டத்திற்கு உட்பட்ட கடவல தோட்ட பிரிவு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராமய பகுதியின் 66 ஆவது தோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு உட்பட்ட தலா ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :