கொவிட் மரணங்கள் 28 வீதத்தால் உயர்வு



யணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுவதுடன், கொவிட் மரணங்களும் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அது 14 நாட்களுக்குள் பரவியிருக்கலாம் என்றும், இந்த தொற்றாளர்கள் தற்போதுதான் பதிவாகி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இந்தத் தொற்றாளர்கள் இதற்குப் பிறகும் பதிவாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :