பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாத சிறை!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரத்திலுள்ள உயர் தர பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது‌‌ தன்னை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் ( Damien Tarel ) என்கிற இளைஞரையும் இந்த சம்பவத்தை தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறிய‌ பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் தனிப்பட்ட முறையில் அந்த இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை என்றும்‌ கூறியிருந்தார். இந் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்ததை ஏற்றுக் கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள் அதில் 14 மாதங்களை ரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறை செல்ல உத்தரவிட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :