திருமலை மக்கள் சேவை மன்றத்தினால் 4ஆம் கட்டமாக பெண்களுக்கான சுகாதார பொதிகள் வழங்கல்



எம்.ஏ.முகமட்-
ன்னி ஹோப் அவுஸ்ரேவியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் கோவிட்-19 தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாதுள்ள பெண்களின் சுகாதார தேவையைக் கருத்திற் கொண்டு பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொருட்கள் 1000 பொதிகள் நான்காம் கட்டமாக இன்று (18) வழங்கி வைக்கப்பட்டது

தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் மூதுார் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். அரபாத் அவர்களிடம் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் அவர்களினால் கைளிக்கப்பட்டது.

கோவிட்-19 தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமாா் ஒரு மாதத்திற்கு மேல் முடக்கம் மற்றும் பிரயாண தடை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பெண்களின் சுகாதார அசௌகரிய நிலமையைக் கருத்திற் கொண்டு மூதுாா் பிரதேச செயலகத்தினால் வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்திற்கு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் அவசரகால நிவாரண நடவடிக்கை திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

குறித்த சுகாதார பாதுபாப்பு பொதிகள் மூதுாா் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாகவும் தோப்பூர் பிரதேச தாய்சேய் குடும்பநல உத்தியோகத்தர்கள் ஊடாகவும் பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மூதுாா் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.கஸ்மி, பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ. எல். எம் நௌபர், மூதுாா் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ். எம். தானீஸ், தோப்பூர் குடும்ப நல உத்தியோத்தர் திருமதி ஹிசானா ஆசிக், மக்கள் சேவை மன்றத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர். கணேசமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :