50 நாட்களாகியும், காரணமின்றி காவலில் வைத்திருப்பது ஏன்..?



ஊடகப்பிரிவு-
னநாயகத்தையும் சந்தேகிக்குமளவுக்கு, எல்லைமீறிச் சென்றுள்ள இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தால் சர்வதேசம் பாரிய அதிருப்தியடைந்துள்ளதையே, ஐரோப்பிய யூனியனின் எச்சரிக்கை காட்டுவதாக, ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியலில் தனிப்பட்டோரைப் பழிதீர்க்கப் பயன்படுத்தப்படுவதாகவும் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு, இன்றுடன் ஐம்பது நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த1200 மணித்தியாலங்களில், எந்தத் துப்புத்தகவல்களும் இவரிடமிருந்து பெறப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால்தானே பெறமுடியும்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் ரிஷாட் பதியுதீன் குற்றவாளியில்லை என்று கூறியும்விட்டதே! இருந்தும் இவரைத் தடுத்து வைத்திருப்பது, பழிவாங்கலுக்கும் சிலரது திருப்திக்கும்தான் என்பதை நாடே உணர்ந்துவிட்டது. இதனால்தான் இவரின் விடயத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் வாந்தியெடுக்கத் தவிக்கின்றனர்.

அப்பாவிச் சமூகங்களையும், அரசியல்வாதிகளையும் அழித்தொழிக்க பாவிக்கப்படும் இந்த அயோக்கியச் சட்டம் ஒழிக்கப்படும் வரைக்கும், இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்க முடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டுக்கு சர்வதேசம் வழங்கும் பதிலடிகளையே, இப்போது ஐரோப்பி யூனியன் எமக்கும் எச்சரித்திருக்கிறது.

எனவே, இந்த அழிவுச்சட்டத்தை ஒழித்து, அப்பாவிகள் வாழ இடமளிக்க வேண்டும். இல்லாவிடின் நாமும், நாடும் அழியும் நிலையே ஏற்படும் என்றும் இவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :