தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கு ரூபா 5000 பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் -
லங்கையில் கொரோணாவின் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 பெறுமதியான உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதனை ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு 02 இல் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக கிடைப்பதற்கான ஒழுங்குகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான  நசிர் அஹமட்  உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இன்று (14) அப்பிரதேச மக்களுக்கு குறித்த உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவ்வுலருணவு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் ஏ.சி அப்கர்,ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HWK. ஜெயந்த்த, ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் MIM. தஸ்லிம், குறித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான கொவிட் - 19 செயலணி அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :