நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழங்கப்படும் ரூபா 5000/- நான்காம் கட்ட கொடுப்பனவு கடந்த புதன்கிழமை நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் கடந்த புதன்கிழமை (2)
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடு வீடாகச் சென்று வழங்கி வைக்கும் நிகழ்வினை மட்டக்களப்பு தரவை -02 மற்றும் வீரமுனை-01 ஆகிய பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், சமுர்த்தி மாவட்ட காரியாலய கணக்காளர் ஐ.எம் பாரிஸ், சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் யூ.எல்.எம் சலீம் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் சுகாதார நடை முறைகளைப் பேணி கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment