அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஆயுதத்துடன் வந்த பெண் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
காலி – ஹுங்கம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(3) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்காளர் இடாப்பில் தனது பெயரை சேர்க்கும்படி குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகரை மிரட்டுவதற்காக சம்பந்தப்பட்ட பெண் கூர்மையான கத்தி ஒன்றை கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டார்.
வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்களுக்கு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment