கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வு( 4) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பொதுமக்களுக்கு 5ஆயிரம் ரூபாவினை இதன் போது வழங்கி வைத்தார்.
றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம்.அப்துல் பரீட்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.உவைஸ்,றகுமானியா அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சமீமா ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பொதுமக்களுக்கு குறித்த தொகையினை வழங்கி வைத்தனர்.
தனிமைப் படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு5ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியினை அண்மையில் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment