ஹஜ் யாத்திரை 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி!



கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு 60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஜூலை மாதம் மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

தற்போது கொவிட்19 பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன. கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவூதி அரேபியா சென்று வசித்து வந்த சில பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :