பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்?



மெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், அதே தினம் மதியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்பார் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றுக்குள் நுழையவுள்ளார்.

பசில் ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்ய உள்ளார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் நாட்களை கழித்த பின்னர் பசில் இன்று காலை நாடு திரும்பினார்.

மேலும், பசில் ராஜபக்ஸ அமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிகரித்த எரிபொருள் விலையை குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :