ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிக் டிக்கெட் ( Big ticket ) லொத்தர் சீட்டிழுப்பில் June மாதத்துக்கான சீட்டிழுப்பு நேற்று இரவு நடைபெற்றது. இச் சீட்டிழுப்பில் இலங்கையைச் சேர்ந்த ரசிக்க என்பவருக்கு 15 Million திர்ஹாமை ( சுமார் 80 கோடி ரூபா ) வெற்றி பெற்றுள்ளார்.
இவர் கடந்த மாதம் 29ம் திகதி இணையத்தளமூடாக 213288 என்னும் இலக்கமுடைய லொத்தர் சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.
நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த வேளையில் பிக் டிக்கெட் சீட்டிழுப்பு ஏற்பாட்டுக்குழுவினர் இந்த வெற்றி குறித்த விபரங்களை தொலைபேசி மூலம் ரசிக்கவிற்கு அறிவித்திருந்தனர்.
இதேவேளை கடந்த மாதம் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பிலும் இலங்கையை சேர்ந்த முகம்மட் மிஸ்வாக் 12 Million திர்ஹாம் ( சுமார் 65 கோடி ரூபா ) வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment