பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, ஜனாதிபதி பொதுமன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா இன்று பெரும்பாலும் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்களப் பத்திரிகையொன்று இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் பிரகாரம் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், துமிந்த சில்வாவையும் இன்று விடுதலை செய்வதற்குரிய ஆவணங்கள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று காலை இதனை அறிவித்துள்ளது.
ReplyForward
0 comments :
Post a Comment