சுமார் ரூ.14 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கோட்டையடி பிரதேசத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது மீன்பிடிப்படகில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
அந்தப் படகிலிருந்து 48 கிலோ 900 கிராம் எடைகொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்திலுள்ள மீனவக் கிராமத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த பொதிகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய 02 மோட்டாச் சைக்கிள்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இந்த கஞ்சா பொதிகள் நடுக்கடலில் வைத்து கைமாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment