கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனையில் மூடப்பட்டிருந்த உணவகம் ஒன்றுக்கு சுகாதார தரப்பினரால் புதன்கிழமை மாலை சிவப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டதாக அந்த வர்த்தக நிலைய உரிமையாளர் வருத்தம் தெரிவித்தார்.
புதன்கிழமை காலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தலைமையில் கல்முனையில் சட்டத்துக்கு புறம்பாக இயங்கியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்த பல வர்த்தக நிலையங்கள் மீதும், அனுமதியின்றி வீதிகளில் பயணித்தோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழ்நிலையிலையிலையே இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
பயணத்தடை காரணமாக மூடப்பட்டிருந்த குறித்த உணவக முன் கண்ணாடியில் சிவப்பு நோட்டிஸ் ஓட்டப்பட்டிருந்ததுடன் அந்த உணவகம் வீட்டுக்கு வீடு உணவை கொண்டு சேர்க்க முறையான அனுமதி பெறப்பட்டிருந்த நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் பயணத்தடை காலத்தில் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment