தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தனிமைப்படுத்தல் முகாமில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தற்போது தலவத்துகொடையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மேற்படி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி உட்பட 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.
எனினும் இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க குறித்த 15 பேர் குழுவில் இருக்கவில்லை.
அவரை கைது செய்ய பொலிஸார் கொழும்பு – கோட்டையிலுள்ள வீட்டிற்குச் சென்றபோது அங்கேயும் அவர் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் அவர் தலவத்துகொடையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
0 comments :
Post a Comment