கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கி வைப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் கொடுப்பணவு நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக 1798 நபர்களுக்கும், முதியோருக்கான தேசிய செயலகம் ஊடாக 634 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் தேசிய செயலகம் ஊடாக 159 மாற்றுத் திறளானிகளுக்கும் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவுகள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், கிராம அதிகாரிகள், சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒன்பது கிராம அதிகாரிகள் பிரிவிலும் மாதாந்த கொடுப்பனவு பெறும் நபர்களுக்கு இருப்பதாறு இலட்சம் ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :