இவர் கட்டுவன்வில முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியையும், பொலன்னறுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தற்போதைய தேசிய பாடசாலை) இடைநிலைக் கல்வியையும், பின்னர் கண்டி தாறுல் உலூம் அல் புர்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் அல் ஹாபிழ் மற்றும் அல் ஆலிம் பட்டம் பெற்றதுடன் தெஹிவலை ஜாமிஆ இப்னு உமர் (தற்போது பானந்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும்) கலாபீடத்தில் தௌரதுல் ஹதீஸ் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்வாரி கலைப்பட்டத்தை பூர்த்தி செய்து தற்போது பட்டதாரி பயிலுனராக வெலிகந்த பிரதேச செயலகத்தில் பதவியேற்று, பொ/திம்பு/வெலி/ சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் பயிற்சி ஆசிரியராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.
மேலதிக தகைமைகளாக: Dip. In General Psychology, Dipm in English, Dip. In Islamic Banking & Leadership training program உட்பட இன்னும் பல கற்கைகளை பூர்த்தி செய்துள்ளார்.
அரசியல் செயற்பாட்டில் ஈடுபாடுள்ள இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவ மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் கௌரவ ரொஷான் ரனஷிங்க அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு அவரது வெற்றிக்கு பங்களிப்பு செய்தார். அதுதுடன் ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டமை, மேலும் பிரதேச பொதுஜன பெரமுன அமைப்பாளர் மற்றும் மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் உட்பட கட்சியின் மாவட்ட உயர்பீடத்துடன் நெருங்கிய அறிமுகம் உள்ளவர்.
ஐக்கிய காங்கிரஸ் உலமா கட்சியின் தலைவரது நேர்மையான செயற்பாடுகளாலும் கருத்துக்களாலும் தான் மிகவும் கவரப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய காங்கிரசின் கொள்கையான நேர்மையான அரசியல் மூலம் சமூகத்தை கட்டியெழுப்ப ஆர்வமுடன் செயல்படவுள்ளதாகவும் இத்ரீஸ் மௌலவி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment