மருத்துவ ஒக்சிஜன் சிலிண்டர்கள் அன்பளிப்பு!



கத்தார் செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்-
லங்கை நாட்டில் கொவிட் -19 தொற்றின் முதலாம், இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாம் அலைஉருவாகியுள்ளது. இந்த Covid-19 தொற்றின் காரணமாக நாள்தோறும் உயிர்ச் சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கிறது.

இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை அரசு, உலகெங்கும் வாழும் இலங்கை மக்களிடமிருந்து மருத்துவ உதவிப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக எதிர்பார்த்து நிற்பதோடு இலங்கை தூதுவராலயங்கள் ஊடாகவும்தமக்கு உதவுமாறு அந்தந்த நாட்டில் வசிக்கும் இலங்கை மக்களிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

இவ்வேண்டுகோளை ஏற்ற, இலங்கை முஸ்லிம்களின் கட்டார் அமைப்பு (FSMA -Q) இலங்கை தூதரகத்தின்வழிகாட்டுதலுடன் மருத்துவ ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் நிதி உதவியுடன் (FSMA - Q) இலங்கைதூதரகத்துக்கு 60 ஒக்சிஜன் சிலிண்டர்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் துரித கதியில் மேற்கொண்டது.
கட்டாரில் இயங்கி வரும் பிற சமூக சேவை அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகளால் ஏற்கனவே வழங்கப்பட்டநன்கொடைகளை விட அதிக பெறுமதி கூடிய நன்கொடை இதுவென்பது குறிப்பிடத்தக்கது..

சேகரிக்கப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமை (11/06/2021) கட்டார் நாட்டிற்கானஇலங்கை தூதுவர் அதிமேதகு கெளரவ திரு. முஹமட் மfபாஸ் முகைதீன், அவர்களிடம் உத்தியோக பூர்வமாகக்கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திரு. முஹமட் ரினோஸ் ஸாலிஹின், பிரதித்தலைவர் திரு. முஹமட் லாபீர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதனைப் பெற்றுக் கொண்ட கட்டாருக்கான இலங்கை தூதுவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
60 மருத்துவ ஒக்சிஜன் சிலிண்டர்கள் என்பது எம்மைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்ததை விட பெரிய எண்ணிக்கைஎன்றார்' மேலும் இதன் மூலம் இலங்கை நாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களில் குறிப்பிட்டஅளவினரின் உயிரை காப்பாற்ற உதவியாக அமையும் என்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும்இதனை பகிர்ந்து கொடுப்பதாகவும் அதேபோன்று இதற்காக பல அர்ப்பணிப்பு களையும் தியாகங்களையும் செய்தஅனைவருக்கும் தாமும் அதேபோல் தூதரகம் சார்பாகவும் மனப்பூர்வமாக நன்றியினையும் வாழ்த்துக்களையும்தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனத்தின் தலைவர் திரு. முஹமட் ரினோஸ் ஸாலிஹீன் உரையாற்றுகையில், இந்ததிட்டத்தை மிகவும் துரித கதியில் அதேநேரம் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆதரவு மற்றும் பங்களிப்பு வழங்கியஅனைத்து உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின்கட்டார் சம்மேளனம் பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :