யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தினால் இரத்ததான முகாம் முன்னெடுப்பு



யாழ் லக்சன்-
யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம் பிரதேச இளைஞர் சம்மேளனங்கள் பொது அமைப்புகள் பங்களிப்புடன் நேற்றையதினம்19.06.2021 இரத்ததான முகாம் மானிப்பாய் பிரதேச சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

சண்டிலிப்பாய் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.பிரினோராச் வழிகாட்டலில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாமில் வலி தென் மேற்கு பிரதேச தவிசாளர் திரு.ஜெபநெசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி.வினோதினி மற்றும் யாழ்ப்பாண இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் செல்வரத்தினம் தசீகரன், சாவகச்சேரி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரவிகுலன் ஜனார்த்தனன், சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.லே.றஜீவன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.உஷாந்தன், லயன்ஸ் கழக தலைவர் திரு.சுபாகர், லியோ கழக தலைவர் திரு.நிசாந்தன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வின் முதலாவது குருதி கொடை வழங்கலை சண்டிலிப்பாய் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.பிரினோராச் அவர்கள் வழங்கி வைத்ததோடு தொடர்ந்து 45 குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :