குடியுரிமை திருத்தச் சட்டம் : நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா விவகாரம் ஆகியவற்றை திசை திருப்பும் முயற்சி ! பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு !!



புதுடில்லி: மத்திய அரசின் தவறான ஆட்சி மற்றும் முறைகேடு பற்றியும், பொருளாதாரத்தில் நாடு அடைந்திருக்கும் வீழ்ச்சி பற்றியும் , கோவிட் தொடர்பான தவறான நிர்வாகத்தைப் பற்றியும் மத்திய அரசிற்கு எதிராக எழுகின்ற கேள்விகளை திசை திருப்புவதற்காக, குடியுரிமை (திருத்த) சட்டம் 2019 ஐ மீண்டும் பின் வாசல் வழியாகக் கொண்டு வர மோடி அரசு முயற்சி செய்கிறது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவர் ஓ. எம். ஏ. ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகள் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கு அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது. குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து 15 மாவட்டங்களில் உள்ள இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ அகதிகளிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பின் அஸ்திவாரங்களை கேள்விக்குட்படுத்தும், பிரிவினை மற்றும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் சட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் கொரோனா சூழலை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறது. வரலாறு மிக மோசமான மருத்துவ அவசர நிலைகளில் ஒன்றை எதிர்கொண்டுள்ளதையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருப்பதும், இறந்த உடல்களை அகற்றுவதில் ஏராளமான சிரமங்கள் உள்ளதும், பொது இடங்களில் இறந்த உடல்களை தகனம் செய்வதும், ஆறுகளில் எறிந்து விடுவதும் இன்னும் பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலைமை நிவர்த்தி செய்வதிலும், குடிமக்களுக்கு தடுப்பூசியை உறுதி செய்வதிலும் மத்திய அரசு தோல்வியை சந்தித்துள்ளது. ஆயினும் கூட, நாட்டின் முஸ்லிம் குடிமக்களை அந்நியப்படுத்துவது மற்றும் மக்களை மத அடிப்படையில் பிரிப்பது என்ற அதன் இந்துத்துவா பாசிச மறைமுக திட்டங்களை பின்பற்றுவதை மத்திய பாஜக அரசு நிறுத்தவில்லை.

சிஏஏ விதிகள் கட்டமைக்கப்படுவதற்கு முன்னர் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. சிஏஏ க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கூட இன்னும் தொடங்கப் படவில்லை. மோடியும் அமித் ஷாவும் ஒரு புதிய பிரச்சினைக்கு மக்களை அழைத்து செல்வதின் மூலம் அரசின் தவறான ஆட்சி மற்றும் முறைகேடு பற்றியும், பொருளாதாரத்தில் நாடு அடைந்திருக்கும் வீழ்ச்சி பற்றியும் , கோவிட் தொடர்பான தவறான நிர்வாகத்தைப் பற்றியும் அரசிற்கு எதிராக கேள்விகளைக் கேட்பதைத் தடுக்கிறார்கள். குடியுரிமைச் சட்டம்-1955 மற்றும் குடியுரிமை விதிகள்-2009 ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற அவர்களின் கூற்றுகளும் ஆதாரமற்றவை. உண்மையில், இந்த அறிவிப்பு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்கு முரணானது. எனவே பாரபட்சமான குடியுரிமை (திருத்தம்) சட்டம்- 2019 ஐ பின் வாசல் வழியாக மீண்டும் கொண்டுவர மோடி அரசு மேற்கொண்டுள்ள எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து நிற்க நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :