சங்கானை வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வருபவர்களை சாதாரண நோயாளிகளிற்கு அண்மையில் அல்லாத பிரத்தியேக இடமொன்றில் வைத்து பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக சங்கானை பட்டின அபிவிருத்திச் சபை மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகைக்கு அமைய அமரர் சின்னத்துரை சுந்தரலிங்கம் JP அவர்களின் ஞாபகார்த்தமாக பலநோக்கு மண்டபம் ஒன்றினை அமரர் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சங்கானை பட்டின அபிவிருத்திச் சபை மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment