முஷாரப் எம்.பியின் நிதியில் ஊடகவியலாளருக்கு உலர் உணவு வழங்கல்!



பைஷல் இஸ்மாயில் -
கொவிட்-19 மூன்றாவது அலை காரணமாக அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண நிதியத்தின் மூலம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாள ஒன்றியத்தின் (நுஜா) தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் (20) ஒன்றியத்தின் அட்டாளைச்சேனை தலைமைக் காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் இணையத்தள ஆகிய ஊடகவியலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும்.

இதன்போது தேசிய ஐக்கிய ஊடகவியலாள ஒன்றியத்தின் (நுஜா) தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் உரையாற்றுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பதவியேற்று இன்னும் ஒரு வருடம் பூர்த்தி செய்யாத நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு முடியுமான வரை அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். இன்று ஊடகவியலாளர்களுக்கு இந்த நிவாரண பொதிகளையும் கூட வழங்கியது, அவரும் கூட ஒரு ஊடகவியலாளராக இருந்தமையினால் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கறித்தவர் என்ற அடிப்படையிலேயே ஆகும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத இந்த விடயத்தை அவர் முன் வந்து ஊடகவியலாளர்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கியமையானது அவரின் நற்காரியங்களில் ஒன்றேன குறிப்பிட முடியும்.
தற்போது இருக்கும் அரசாங்கத்துடன் மக்களுக்கு பயன்தரும் விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மக்களுக்கு பிரச்சினைகள் வரும் விடயங்களில் இருந்து ஒதுங்கி நடக்கக்கூடியவராகவும் இருந்து கொண்டு மக்களின் துயர் துடைக்கும் ஒருவராக முஷாரப் எம்.பி காணப்படுகின்றார்.

எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளருக்கு முடியுமான வரை உதவிகளை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஊடாக இந்த செய்தியை அவருக்கு எத்தி வைக்கிறேன் என்பதோடு, ஊடகவியலாளர்களினும் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ் கலந்து கொண்டு ஊடகவியலாளருக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :