பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்



அரசாங்க தகவல் திணைக்களம்-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தற்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாகன இறக்குமதிக்கான பெறுகை முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும்.இதற்காக ஒரு பில்லியன் ரூபா செலவாகும். மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின்நிற்கப்போவதில்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் விவாட் கப்ரால் கூறினார்.

பயணத்தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் நாட்டிற்கு 45 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.. உள்ளுர் உற்பத்திகளினால் கிடைக்கும் வருமானம் ஆயிரத்து 500 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பயணத் தடை காலப்பகுதியில் சிறிய அளவிலான வர்த்தகர்களின் வருமானம் வீழ்ச்சி கண்டிருப்பதனால் கடன் செலுத்தும் வீதமும் குறைவடைந்திருக்கின்றது. இது பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார. இதேவேளை, அரச சேவையாளர்களில்; அதிகளவானோருக்கு வேலை வழங்காது சம்பளம் வழங்கும் நிலை ஏற்பட்டிப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.

பொதுவான வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதகாவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 15 மாதங்களாக இந்த நிதி சேமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :