கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தனிமைபடுத்தபட்டுள்ள பகுதிகளுக்கு உலருணவுப் பொருட்களை துரிதப்படுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய பிரதேசங்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் முதற் கட்டமாக ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீராவோடை பகுதியில் அதிகளவான மக்களுக்கு இதுவரைக்கும் நிவாரணங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.
எனவே, இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment