தெமட்டகொடை, பொரல்லை போன்ற கொழும்பின் பிரதேசங்களில் அதி வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
கடந்த முறை அடையாளம் காணப்பட்ட B117 வைரஸ் பிரிவை விடவும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள B.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் வீரியம் கொண்டது என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
கொவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவு (DOSE) பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment