கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (17) காலை தீ விபத்தில் சேதமடைந்த திருமலை மாவட்ட கோமரங்கடவெலவின் பக்மிகமவில் வசிக்கும் திருமதி டி.சாந்தி குமாரி தயரத்னாவின் வீட்டை புனரமைப்புச் செய்ய நிதி உதவி வழங்கினார்.திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனர் செயலகத்தில் வைத்து குறித்த நிதியினை வழங்கினார்.
தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்துள்ள குடும்பத்தைப் பார்க்க ஆளுநர் அதே நாளில் அண்மையில் அங்கு சென்றார். தீ விபத்தில் சிக்கிய வீட்டை புனரமைப்பு செய்ய ஆளுநர் பணத்தையும் வழங்கினார்.
மேலும், குடும்பத்தினரின் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலை உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கினர். பின்னர், வீட்டை சரிசெய்ய தேவையான மேலதிக உதவிகளை வழங்குமாறு ஆளுநர் உடனடியாக மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜெ. ஜெனார்த்தனுக்கு உடன் இதன் போது அறிவித்தார். இதன் விளைவாக, மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் இதனை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment