ஈச்சிலம் பற்று கொரோனா இடை நிஸை மத்திய நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் கையளித்தல்



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை மத்திய நிலையத்திற்கு பெரெண்டினா நிறுவனத்தினால் மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருத்துவ சாரா பொருட்களும் (19) கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தரிசன பாண்டிக் கோரலா தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் வைத்தியசாலை நிர்வாகிகளிடம் பெரெண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். விஜிந்தன் அவர்களினால் இதனை ஈச்சிலம்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஈச்சிலம்பற்று வைத்தியசாலை அதிகாரிகளினால் கோவிட் -19 இடைநிலை மத்திய நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பெரெண்டினா நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட விஷேட வேண்டுகோள் அடிப்படையில் பெரெண்டினா நிறுவனத்தின் அவசரகால நிவாரண திட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சம் பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவ சாரா பொருட்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த அத்தியாவசிய குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்த பெரெண்டினா நிறுவனத்துக்கும் தாம் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாகவும் இதன் மூலம் வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் சிறப்பான சேவையை வழங்குவதற்கு இது வழிவகுக்கும் என்றும் தாம் நம்புவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்

இந்த மருத்துவ உபகரணத் தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் கே.குணநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி டாக்டர். சௌந்தர்ராஜன், ஈச்சிலம்பற்று கொரோனா இடைநிலை மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் தேவதாசன், அதன் வைத்தியர்களான சாமர விஜயசிங்க, ஆர் எஸ் ஜே பண்டார, பெரெண்டினா நிறுவனத்தின் அதிகாரிகளான கே.தவசீலன், சம்பத் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :