நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணாமல் போயுள்ளனர்
இதேவேளை ரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே அத்தனகலு ஓயா களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகிய வற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹொரனை அகலவத்தை இங்கிரிய பாலிந்த நுவர புளத்சிங்கள தொடாங்கொட மில்லனிய களுத்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment