தொற்றாளர்களால் நிரம்பிவழியும் ஐ.டி.எச் மருத்துவமனை!



J.f.காமிலாபேகம்-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்கள் குவிந்துள்ளனர்.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் 160 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருவதனால் அந்தப் பிரிவிலுள்ள அனைத்து நோயாளர் கட்டில்களும் பூரணமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைமைக்குத் தள்ளப்படுகின்ற நோயாளர்களுக்கு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையே சிகிச்சையளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :