அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பொத்துவில் பிரதேசத்தில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த ஒரு தொகுதி ஊறணிக்கிராம அமக்களுக்கு உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.
தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட தாயகஉறவுகளின் பசியைப்போக்க ஆயிஷா அறக்கட்டளை இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
ஊறணிக் கிராம மக்களுக்கென உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.
நிகழ்வில் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டனர்.அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.
பயனாளிகள் கருத்துரைக்கையில் ஆயிஷா அறக்கட்டளை நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று கூறினர்.
0 comments :
Post a Comment