காரைதீவில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சிய ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரால் இன்று (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் பதிவாகியது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காரைதீவு பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலையே இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
அம்பாறை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. எஸ். ஜெயலத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் காரைதீவு எட்டாம் பிரிவை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் 40 கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தும் ஏற்பாடுகளை செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment