உலகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் அஸ்ட்ரா ஜெனேக்கா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த முன்னர் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியது. கடந்த மாதம் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் சீனாவின் சினோவெக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி கொடுத்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியைப் பெறும் சீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி கொடுத்துள்ளது.
சினோவெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம், உலக நாடுகள், இந்த தடுப்பூசிக்கு விரைவாக அனுமதி அளிக்கவும் அதை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல், கோவெக்ஸின் தடுப்பூசி திட்டம் மூலம் இந்த தடுப்பூசியை இனி வருமானம் குறைந்த நாடுகளுக்கு வழங்க முடியும். சினோவெக் தடுப்பூசியை ஏற்கனவே, சீனாவை தவிர்த்து பிரேசில், சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்பாட்டில் வைத்துள்ளன.
0 comments :
Post a Comment