ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த பொத்துவில் செங்காமம் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு



பைஷல் இஸ்மாயில் -
பொத்துவில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு “ஹெட ஓயா” மூலம் எட்டப்படுவதே பொருத்தமானது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதை இலக்காக வைத்து பல பொறிமுறைகளின் கட்டங்களை எதிர்நோக்கிச் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பின் பயணம் தொடர்கிறது.

"தீர்வே விடிவு" என்ற அவரது பயணத்தின் திரட்சியான நோக்கத்திற்கு பலன் வெகுவிரைவில் கிடைக்கும் என்று அவரும், பொத்துவில் பிரதேச மக்களும் மிகப் பலமாக நம்புகின்றனர். இறைவனின் உதவியால் அந்தப் பயணம் நிறைவேறும், அதில் வெற்றியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

“ஹெட ஓயா” திட்டம் சாத்தியமாகும் போது, பொத்துவில், லாகுகல, கோமாரி, பாணம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் எல்லா மக்களுக்குமான குடிநீர் பிரச்சினை தீர்வதுடன் பயிர்ச்செய்கை நீர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்ற ஒரு வழியாகவும் அது உருவெடுக்கும். "பெருவிருந்து கிடைக்கும் வரைக்கும் பட்டினி கிடக்கலாமா?" என்று சொல்வார்கள். “ஹெட ஓயா” என்பது நமக்கான பெருவிருந்தல்ல, அது அத்தியாவசியமான தேவை. அதுவே நீர்ப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கின்ற வழியாகும்.

ஆனாலும், நீர்ப் பிரச்சினையை நித்தமும் சந்திக்கின்ற மக்களுக்கு, அதனை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது திகாமடுல்ல தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தார்மீகப் பொறுப்பாகும். இதனை கடந்த காலங்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பெற்றுக்கொடுக்க முனையவில்லை. மாறாக பொத்துவில் பிரதேச மக்களை ஏமாற்றி அம்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் பல பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் வித்தையில் ஈடுபட்டார்களே தவிர அம்மக்களுக்கு அத்தியவசியத் தேவையாக காணப்பட்ட எதையும் நிறைவு செய்து கொடுக்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.

பொத்துவில் மக்களின் அத்தியவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவேண்டும், அம்மக்களை தொடராக ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தும் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க வேண்டும், இனிமேலும் பொத்துவில் பிரதேச மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது, “எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்போம்” என்ற சிந்தனையில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த துடிப்பான இளம் ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷாரப் என்ற இளைஞர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டு களத்தில் இறங்கி செயற்பட ஆரம்பித்தார்.

அவரின் ஆரம்பப் பயணத்துக்கு பொத்துவில் பிரதேச மக்களின் உதவி இன்றியமையாதவையாக காணப்பட்டது. அதுமாத்திரமின்றி பொத்துவிலை அன்டிய ஏனைய பிரதேச மக்களும் அவரின் வெற்றிக்கு கை கோர்த்தனர். அதனால் அவர் வெற்றியைக் கண்டார், பாராளுமன்றம் சென்றார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மட்டுமல்ல என்றுமே பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கும் உறுப்பினர்களாகவும், தூங்கும் உறுப்பினர்களாகவுமே இருந்தார்கள். இப்போதும் இருந்து வருகின்றார்கள். இவை அனைத்துக்கும் மாற்றமாக செயற்பட்டு வருகின்ற ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பின் தொலை நோக்கு விடயங்களைக் கண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று விழிப்படையத் தொடங்கி செயற்பட ஆரம்பித்து விட்டார்கள்.
முஷாரப்பின் துணிச்சல் மிக்க யுக்தியான முறைகளைக் கையாண்டு பொத்துவில் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமல்ல, அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற தேட்டத்தோடு, அதற்கான உபாயங்களை தேடிக்கொண்டிருக்கும் ஒருவர் என்றும் கூறலாம்.

இந்நிலைமையில் இலங்கை அல் நூர் சமூக சேவை அமைப்பு பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இந்த அமைப்பினர், நாடு பூராக நல்ல பல சமூக சேவைத் திட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள் என்பதையும் அறிந்த அவர், பொத்துவில் பிரதேச மக்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கி வருகின்ற குடிநீர்ப் பிரச்சினை பற்றி அவர்களிடம் பேசியபோது, அதை நிவர்த்திக்கவும் குடிநீர்த் தேவையுள்ள பிரதேசங்களில் ஆழ்துளை குழாய்க் கிணறுகளை அமைத்துத் தரவும் முன்வந்தார்கள்.

அதன் முதற்கட்டமாக, பொத்துவில் செங்காமத்தில் வாழும் 500 குடும்பங்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் 50 ஆயிரம் லீற்றர்கள் நீர் கொண்டு செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த பிரதேசம் வரண்ட பிரதேசமாக இருந்த போதிலும், இனங்காணப்பட்ட இடத்தில் ஆழ்துளை தோண்டப்பட்ட போது, மிகப்பெரிய நீரூற்று உருவாகி, நீர் பீறிட்டுப் பாய்ந்து அந்த மக்களின் கண்ணீரை கழுவிச் சென்ற காட்சியை கண்ட பொத்துவில் பிரதேச மக்களை மட்டுமல்ல அம்பாறை மாவட்ட மக்களின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.

பொத்துவில் பரதேச மக்களின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடிய எல்லாம் வல்ல இறைவனுக்கு புகழ் அனைத்தும் உண்டாவதாக, அல்ஹம்துலில்லாஹ். என்ற மக்களின் ஓசையும் ஆனந்தக் கண்ணீரும் அன்றைய தினம் காணக்கூடியதாக இருந்து.

இந்தத் திட்டத்தை செயல்வடிவமாக்க உதவி நல்கிய இலங்கை அல் நூர் சமூக சேவை அமைப்புக்கு பொத்துவில் பிரதேச மக்களின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் நன்றிக் காணிக்கைகளை தெரிவிக்கின்றார். குறிப்பாக அல் நூர் சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.அலியார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை செய்துகொடுக்க உதவிய அல் நூர் சமூக சேவை அமைப்புக்கு செங்காமம் பிரதேச மக்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனோடு இருப்பார்கள், இருக்கவேண்டும்.
அத்தோடு, இந்தத் திட்டத்தின் செயல்வடிவத்தை சாத்தியமாக்க தொடர்ச்சியாக உதவி செய்த, சமாதான கற்கை நெறிக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வை.எல.நியாஸ், அல் நூர் சமூகசேவை அமைப்பின் உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், திட்ட அமுலாக்கல் குழு உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றிகளைத் தெரிவிக்கின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :