ஆயுததாரிகள் ஊடுருவல்-புலனாய்வு எச்சரிக்கை?இந்தியாவில் அடுக்கு பாதுகாப்பு



J.f.காமிலா பேகம்-
லங்கையில் இருந்து ஆயுதக் குழுக்கள் ஊடுருவ முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகல்களுக்கமைய, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொலிஸார் மற்றும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இந்திய மத்திய புலனாய்வு பிரிவினரால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆயுதகுழுக்களுடனான படகு ஒன்று இராமேஸ்வரம் நோக்கி சென்றுள்ளதாக புலனாய்வு தரப்பினரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், குறித்த நபர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, தமிழகத்தின் கரையோர பிரதேசங்களில் ஆயுதமேந்திய பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கப்பல்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, கேரள மாநிலத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :