நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பல்வேறு வர்த்தக வங்கிகளும் தமது சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், இன்று(7) மற்றும் நாளை (8) ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என, ஹற்றன் நெஷனல் வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, தேசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
மேலும், தமது அனைத்து 365 நாள் வங்கிக் கிளைகளும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும், தேசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, சம்பத் வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், வார இறுதி, விடுமுறை நாள் வங்கிச் சேவைகள் மற்றும் நீடிக்கப்பட்ட வங்கிச் சேவைகள் ஆகியன மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் எனவும், சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment