ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் சுயதனிமைப்படுத்தலில்



ஏறாவூர் நிருபர் நாஸர்-
றாவூர் நகர் பிரதேச செயலகத்தின் வாகன சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் சுயதனிமைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச செயலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பிரகாரம் அவருக்கு இதுவரை தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவருக்கும் அவரது குடும்ப உறவினர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏறாவூர்ப் பிரதேசத்தின் பணிகள் ஏனைய அதிகாரிகள் ஊடாக தங்கு தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக அறிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வாழும் ஒரு தொகுதி குடும்பங்களுக்கான நிவாரணப்பொதிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.
ஏனைய குடும்பங்களுக்கு விரைவில் உலருணவுப்பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :