வடமாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக நேற்றையதினம்(17.06.2021) கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வலி மேற்கில் பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
WHO நிதியளிக்கும் ADIC செயற்படுத்தும் கொரோனா தடுப்பு செயற்றிட்டதிற்கான யாழ் மாவட்ட பொறுப்பாளரும் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவருமாகிய த.சுஜீதரன் தலைமையில் நான்காம் கட்டமாக இச் செயற்பாடு இடம் பெற்றது.
குறித்த செயற்றிட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செ.தசிகரன் அவர்களும் சங்கானை பிரதேச சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் ஜடாயு தன்னார்வ அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment